வென்றவர்கள் மத்தியில் இருக்கிற இன்னும் வெல்லாதவர்கள்

Pahir : Learning & Sharing

 – சம்பூர் வதனரூபன் கவிதைகள் –


adayalamatiruththal-500x500

1.
சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” (வடலி வெளியீடு, 2013 டிசம்பர்) கவிதைத் தொகுப்பின் கவிதைகள் பூர்விக நிலம் பறிபோதலை, தம் ஊரிலிருந்து அகற்றப்பட்ட பிறகு நினைவுகளில் உள்ள ஊர் ஏற்படுத்தும் அகலா வலியை, அதனைப் பின்னிய உணர்வோட்டங்களைப் பதிவு செய்கின்றன. நீண்ட வரலாற்றை உடையதான தமிழ்ப் பகுதிகளில் இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஈழப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு எம்மிடையே ஏலவே கவனத்துக்குள்ளாகிய ஒன்றே. 2006 இல் நிகழ்ந்ததான திருகோணமலை மாவட்டம், சம்பூரிலிருந்து மக்களது வெளியேற்றம் வெளிப்படுத்துவதும் ஆக்கிரமிப்பாளர்களைப் பொறுத்தவரை அது தொடர்ச்சியான வேலைத் திட்டம் என்பதே.

நூலின் முன்னுரையில் மு.மயூரன் குறிப்பிடுவதுபோல, ‘45% இற்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் 35% இற்கு மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலையும் செய்துவந்த தன்னிறைவான நிலமான சம்பூர் எனும் சிறு கிராமத்தின் 5000 ஹெக்டேயர் நிலப்பரப்பு “உயர்பாதுகாப்பு வலயம்” என்ற பெயரில் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்விடத்திற்தான் இந்தியாவின் பாரிய நிலக்கரி மின்நிலையமும் 4000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வரிவிலக்களிக்கப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு முதலீட்டு வலயமும் உருவாகவுள்ளன.’

மக்களின் நிலங்கள் அந்நிய முதலீடுகளுக்கும் உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசுக்கும் பறிபோகையில் நிலம் யாருடையது என்கிற கேள்வி தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. உலகப் பரப்புகளில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலம்சார் போராட்டங்களும் அவைக்கு எதிரான பின்காலனித்துவ அடக்குமுறைகளும் தொடர்கின்றன. கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பூர்விகக் குடிகளிடமிருந்து திருடப்பட்ட நாடுகளது; இஸ்ரேல்…

View original post 1,267 more words

Advertisements